சினிமா செய்திகள் நடிகை

அடி வாங்கத் தயாராக இருங்கள் – தமிழ் நடிகரை மிரட்டும் ஸ்ரீரெட்டி

தெலுங்குத் திரைப்பட உலகினர் தன்னை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிட்டார்.

தெலுங்குத் திரையுலகினர் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறிவருகிறார்.

ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்லக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவரைக் கண்டித்தது. தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் காவல்துறை விசாரணை நடத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான வாராகி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தார்.

அதில், நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபச்சாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை கைது செய்து விட்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை ஸ்ரீரெட்டி மறுத்ததுடன் வதந்தி பரப்பியவர்களுக்கு கண்டனமும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கூறி இருப்பதாவது:-

நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உணவு கூட தராமல் வெளியே அனுப்பினார்கள். யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை.என்னைப் பற்றி அவதூறாகப் பேசிய வாராகி என்னிடம் அறை வாங்கத் தயாராக இருங்கள்.என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள்.

பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்குப் பதிலாக என்னை வைத்து மலிவான விளம்பரம் தேட நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

காவல்துறையில் புகார் கொடுத்தால் ஸ்ரீரெட்டி பயந்துவிடுவார் என்று நினைத்தால், புகார் கொடுத்தவரை அடிப்பேன் என்று வெளிப்படையாகச் சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts