சினிமா செய்திகள்

கடைக்குட்டி சிங்கம் படத்தின் இலாபம் எவ்வளவு?

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் அவருடைய தம்பி கார்த்தி நாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம் ஜூலை 13 அன்று வெளியானது.

அந்தப்படம் வெளிவருவதற்கு முந்தைய நாள் தமிழ்ப்படம் 2 வெளியானது.

தமிழ்ப்படம் 2 படம் வெளியாவது கடைக்குட்டி சிங்கம் குழுவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் அதைப் பொய்யாக்கி இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறதாம்.

குடும்பத்தோடு பார்க்கிற படம் என்கிற நற்பெயரோடு நல்ல வசூலையும் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சுமார் முப்பத்தைந்து கோடி வரை தமிழக திரையரங்குகளில் வசூல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

படம் வெளியாகி இரண்டு வார முடிவில் சுமார் 13 கோடி இலாபம் ஈட்டியிருப்பதாக திரைப்பட வியாபாரிகள் மத்தியில் பேச்சு.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா ஜூலை 24 அன்று நடைபெற்றது. இது உண்மையான வெற்றிவிழா என்று விநியோகஸ்தர்கள் தரப்பும் ஒப்புக்கொள்கிறது

இப்படத்தின் வியாபார வெற்றி குறித்துக் கொஞ்சம் கவலையில் இருந்த கார்த்தி இப்போது மிக உற்சாகமாக இருக்கிறார்.

Related Posts