சினிமா செய்திகள்

நல்ல படம் நல்ல தேதி உற்சாகத்தில் மிஸ்டர் சந்திரமெளலி படக்குழு

திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் அவருடைய அப்பா கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் மிஸ்டர் சந்திரமெளலி.

ரெஜினா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமிசரத்குமார், இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

கோ.தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படம் ஜூலை ஆறாம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்போதெல்லாம் படத்தை எடுப்பதை விட அதை வெளியிடுவதுதான் சவாலான காரியம்.

சரியான வெளியீட்டுத்தேதி கிடைப்பதுதான் ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் விசயமாகவே இருக்கிறது.

அந்த வகையில் மிஸ்டர் சந்திரமெளலி படக்குழுவுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

கடந்த வாரம் வெளியான அசுரவதம், செம போத ஆகாத ஆகிய படங்கள் சரியில்லை என்கிற நிலை, அது மட்டுமின்றி இதே ஜூலை ஆறாம் தேதி வெளியாவதாகச் சொல்லப்பட்ட சந்தானம் நடித்த சர்வர்சுந்தரம் படமும் வெளியாகவில்லை.

இவ்விரண்டும் மிஸ்டர் சந்திரமெளலிக்குப் பெரும்பலம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஏற்கெனவே படத்தின் பாடல்கள், முன்னோட்டம் மற்றும் காட்சிகள் ஆகியன நல்ல வரவேற்புப் பெற்றிருக்கின்றன.

படமும் நன்றாக இருந்து வெளியீட்டுத் தேதியும் சரியாக அமைந்தால் சொல்லவா வேண்டும்? இப்படம் நிச்சய வெற்றிப் படமாக இருக்கும் என்பதுதான் இப்போதைய பேச்சு.

Related Posts