நட்புக்காக இறங்கிவந்த ரஜினி – கர்நாடக ஆச்சரியம்
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் சுமலதா தம்பதியினரின் மகன் அபிஷேக் கெளடா கன்னடப் படமொன்றில் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.
கன்னடத்தில் மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த நாக்சேகர் இயக்கும் புதியபடத்தில்தான் அபிஷேக் கதாநாயகனாகியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது.

Ambareesh Abishek
அதனால் அவருக்கு பிரபலமான நண்பர்கள் அதிகம்.ரஜினிகாந்தும் அவருடைய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்.
தன் மகனைக் கதாநாயகனாக்கும் இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் தன் நண்பர் ரஜினியிடம் கேட்டிருக்கிறாராம்.இதுபோல் இதுவரை செய்ததில்லை என்றாலும் அம்பரீஷ் கேட்டுக் கொண்டதால் ரஜினி அதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ரஜினி, எப்போது படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை ஆனால் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிற செய்தியே மிகவும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது.











