பொய்களைத் தடுக்க இயக்குநர் பாலா எடுத்த முடிவு
நாச்சியார் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழ் மாற்று தான் இப்படம்.
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே இப்படத்தின் நாயகி யார் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு.இப்போது “வர்மா” படத்தின் கதாநாயகியாக மேகா எனும் புதுமுகம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ்த் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார்.
கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குநர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சி என்கிறார்.
நாயகி பற்றிய திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?
பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘வர்மா’. இது, தெலுங்கு திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த படத்தின் கதாநாயகி யார் என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா ஜோதிகாவின் குழந்தையாக நடித்திருந்த ஷ்ரியா ஷர்மா தான் வர்மா படத்தின் கதாநாயகி என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஷ்ரியா ஷர்மா தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படி ஒரு செய்தி வந்ததாலேயே திடீரென அறிவித்தாகச் சொல்லப்படுகிறது.
உண்மையைச் சொல்லாத வரை பொய்கள் பரவிக்கொண்டே இருக்கும் என்பதால் அதைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.











