சினிமா செய்திகள்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதியபடம் தொடக்கம்

மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

அவற்றிற்கடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் நான்காவது படம் நேற்று (டிசம்பர் 14,2020) தொடங்கியிருக்கிறது.
சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கவுள்ளார்.

படத்தைத் தொடங்கும்போதே பெயர் வைத்துவிட்டார்கள்.படத்துக்கு ‘அன்பறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஹிப் ஹாப் ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

Related Posts