சென்னையில் பூசை திண்டுக்கல்லில் செட் – தொடங்கியது மிஷ்கினின் பிசாசு 2
‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு 2020 செப்டெம்பர் 20 ஆம் தேதி மிஷ்கின் பிறந்தநாளையொட்டி வெளியானது.
பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, இலண்டனைச் சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
நேற்று (டிசம்பர் 14, 2020) ‘பிசாசு 2’ பட வேலைகள் பூசையுடன் தொடங்கியுள்ளது.சென்னையில் நடைபெற்ற பூசையைத் தொடர்ந்து இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுகல்லில் துவங்கியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறதென்றும் ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.












