விஸ்வாசம் சிவா சூர்யா கூட்டணி அமைந்தது எப்படி?
2011 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அதைத் தொடர்ந்து அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் அண்மையில் வெளியான விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார்.
தொடர்ந்து நான்கு படங்கள் சிவா இயக்கத்திலேயே நடித்த அஜீத், இப்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் சிவா அடுத்து என்ன செய்யப்போகிறார்?
அடுத்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.
இவர்கள் இருவரும் இணையும் இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.
சிறுத்தை படம் முடிவடையும் நேரத்தில் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்துக்கு இன்னொரு படம் இயக்குகிறேன் என்று ஒப்பந்தம் போட்டிருந்தாராம் சிவா.
ஆனால் அவர் தொடர்ந்து அஜீத்துடன் பயணப்பட்டதால் அது நடக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருந்ததாம்.
அந்த ஒப்பந்தம் காரணமாக இப்போது ஸ்டுடியோகிரீன் நிறுவனத்துக்கு படம் இயக்குகிறார். அவர் சொன்ன கதை சூர்யாவுக்குப் பொருத்தமாக இருந்திருக்கிறது. அவரும் ஒப்புக்கொள்ள படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன என்கிறார்கள்.
சூர்யா இப்போது செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களைத் தொடர்ந்து இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.
அந்தப்படம் முடியும் நிலையில் அல்லது அந்தப்படம் நடக்கும்போதே சிவா இயக்கும் படம் தொடங்கும் என்று சொல்கிறார்கள்.











