September 17, 2026
சினிமா செய்திகள்

மும்பையில் ஒரு மாதம் படப்பிடிப்பு – ரஜினி ஓட்டுப் போடமாட்டாரா?

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனராம்.

அப்படியானால் ஏப்ரல் 18 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ஓட்டுப்போடமாட்டாரா? என்று கேட்டால்,

பத்தாம் தேதி தொடங்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ரஜினி 17 ஆம் தேதி புறப்பட்டு சென்னை வருகிறாராம். 18 ஆம் தேதி ஓட்டுப் போட்டுவிட்டு அன்று மதியமே மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்கிறார்கள்.

அவருடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூம் ஓட்டுப் போட சென்னை வந்து செல்கிறாராம்.

Related Posts