சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போனது வாடிவாசல் – காரணம் என்ன?

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர்.

அதன்பின் டைட்டில் லுக் என ஒன்றை வெளியிட்டனர்.

ஆனால், படப்பிடிப்பு எப்போது? என இதுவரை சொல்லப்படவில்லை.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள்.

இப்போது அதிலும் மாற்றம் நேர்ந்திருக்கிறதாம்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம்தான் அடுத்து தொடங்கவிருக்கிறதாம்.

வாடிவாசல் என்னவாயிற்று என்றால்?

ஏற்கெனவே எழுதப்பட்டகதை என்றாலும் அதைத் திரைக்கதையாக மாற்றுவதில் தாமதம் ஆகிறதாம். ஒரு வடிவத்துக்கு மூன்று வடிவங்களில் எழுதிப்பார்த்தும் நிறைவாக வரவில்லை என்கிறாராம் வெற்றிமாறன்.

இதனால், சரியாக எழுதவேண்டும் என்பதற்காக மேலும் கால அவகாசம் கேட்டிருக்கிறார் வெற்றிமாறன்.

இதனால்தான் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகிக் கொண்டேயிருக்கிறதாம்.

Related Posts