சினிமா செய்திகள்

பிறந்தநாள் விழாவுக்கு அழைத்த கமல் பறந்தோடிய சுபாஸ்கரன்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

இதையொட்டி அவருடைய இரசிகர்களும் அவரது கட்சியினரும் அங்கங்கே நற்பணிகள் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், கமல் தற்போது நடித்துவரும் விக்ரம் படத்தின் குழுவினர் அவர் பிறந்தநாளைக் கொண்டாட சிலசிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்நிகழ்வுக்கான அழைப்பு லைகா நிறுவனர் சுபாஸ்கரனுக்கும் கொடுக்கப்பட்டதாம்.

அவர் இப்போது குருப்பெயர்ச்சியையொட்டி ஆன்மீகப் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார்.

இராமேஸ்வரம், கும்பகோணம், திருச்சி ஆகிய ஊர்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று வந்துள்ளார்.

இன்று திருச்சியில் இருக்கும் அவரை கமல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள அழைத்தார்களாம்.

இந்த அழைப்பு காரணமோ என்னவோ தெரியவில்லை, அவர் சென்னைக்கே வராமல் திருச்சியிலிருந்தே சொந்த ஊருக்குக் கிளம்பிவிட்டாராம்.

இந்தியன் 2, சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கிறான் உட்பட பல விசயங்களில் ஙமலுக்கும் லைகாவுக்கும் சில கருத்துவேறுபாடுகள் உள்ளன.

அதனா்், கமல் சந்திப்பு சுமுகமாக இருக்காது என பயந்து அவர் சென்னை வராமல் அப்படியே கிளம்பிவிட்டார் என்கிறார்கள்.

பிரபலங்கள் என்ன செய்தாலும் அதற்கு உள்ளர்த்தம் கற்பிப்பதே வேலை என்று அதற்கு எதிர்வினையும் வருகிறது.

Related Posts