February 12, 2025
சினிமா செய்திகள்

ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கில் பிரபாஸ், பூஜாஹெக்டே உட்பட பலர் நடித்திருக்கும் ராதேஸ்யாம் படம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் முன்னூறு கோடி செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தையும் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையையும் ரெட்ஜெயண்ட் நிறுவனமே பெற்றிருக்கிறது.

இதனால், ஒருநாள் வித்தியாசத்தில் இரண்டு படங்களையும் வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறது ரெட்ஜெயண்ட் நிறுவனம்.

இப்போது, சூர்யா படத்துக்குப் போக மீதித் திரையரங்குகளில் மட்டும் ராதேஸ்யாம் வெளியாகும். அதுவும் முக்கியமான திரையரங்குகள் சூர்யா படத்துக்கே போய்விடும் என்பதால் ராதேஸ்யாம் படக்குழு அதிருப்திக்கு ஆளாகும் நிலை.

நேற்று முன் தினம், லைகா நிறுவனம் இதே சிக்கலில் சிக்கியது. காலையில் லைகா தயாரித்த டான் மார்ச் 25 இல் வெளியாகும் என்று அறிவித்தார்கள். மாலையில் ஆர் ஆர் ஆர் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் அந்நிறுவனம் தர்மசங்கடத்துக்கு ஆளாகியிருக்கிறது. அதேபோல் இப்போது ரெட்ஜெயண்ட் நிறுவனமும் தர்மசங்கடத்துக்கு ஆளாகியிருக்கிறது.  

Related Posts