சினிமா செய்திகள் நடிகர்

அறம் இயக்குநரை சித்தார்த் கழற்றி விட்டது எதனால்?

கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் அறம். அந்தப்படம் வெற்றி பெற்றதோடு அதுபற்றிய பரவலான விவாதங்களையும் உருவாக்கியது.

அதிகாரவர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய படம் என்பதால் அதற்கு அவ்வளவு வரவேற்பு.

இக்காலத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநரை பெரிய கதாநாயகர்கள் தொடங்கி பல்வேறு தயாரிப்பாளர்கள் சுற்றி வளைப்பார்கள்.

ஆனால் அறம் பட இயக்குநர் கோபிநயினார் நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

வித்தியாசமான கதைகளை விரும்பக்கூடிய நடிகர் சித்தார்த், கோபிநயினாரிடம் ஒரு கதை கேட்டு பிடித்துப்போய் அவர் இயக்கத்தில் நடிக்கத் தயாரானாராம்.

ஆனால் திடீரென கோபிநயினார் படம் வேண்டாம் என முடிவு செய்து புதுஇயக்குநர் சாய்சேகர் என்பவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப்போய்விட்டார்.

ஏன்?

அறம் படத்தின் கதை திரைக்கதை கோபிநயினாருடையதுதான். ஆனால் அவருக்குப் படமே எடுக்கத்தெரியவில்லை என்று திரையுலகில் பரவலாகப் பேசப்படுகிறது.

இது சித்தார்த்துக்கும் தெரிந்துவிட்டதால் அவர் கோபிநயினார் படம் வேண்டாமென முடிவு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இதுதான் உண்மையா?

Related Posts