சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறது ரோஜாகம்பைன்ஸ் – பிரபுசாலமன் இயக்குகிறார்

தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த நிறுவனம் காஜாமைதீனின் ரோஜா கம்பைன்ஸ்.

விஜயகாந்த் நடிப்பில் வாஞ்சிநாதன்,பேரரசு ஆகிய படங்களையும் சரத்குமார் நடித்த பாட்டாளி, சமஸ்தானம் ஆகிய படங்களையும்,பிரபுதேவா நடித்த அள்ளித்தந்தவானம்,சார்லிசாப்ளின் உள்ளிட்ட படங்களையும்,முரளி நடித்த பொற்காலம்,பூந்தோட்டம் உள்ளிட்ட படங்களையும்,அஜீத் நடித்த ஆனந்தப் பூங்காற்றே,ஜனா ஆகிய படங்களையும்,தனுஷ் நடித்த தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட ஏராளமான படங்களைத் தயாரித்த நிறுவனம்.

ஒருகட்டத்தில் அந்நிறுவனம் முடங்கியது. கடைசியாக 2006 ஆம் ஆண்டு வெளியான பேரரசு படம் அந்நிறுவனத்தின் தயாரிப்பு.அப்படத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார்.உதயன் இயக்கியிருந்தார்.

அதற்குப் பின் அந்நிறுவனம் படம் தயாரிக்கவில்லை.

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நிறுவனம் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளது.

இப்போது இந்நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள படத்தை பிரபுசாலமன் இயக்குகிறார்.இவர் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு பலமொழிகளில் எடுக்கப்பட்ட காடன் படம் வெளியானது.அவரும் நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அடுத்தபடத்தைத் தொடங்குகிறார்.

இந்தப்படத்தில் மூத்தநடிகர் விஜயகுமாரின் பேரன் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளா தம்பதியினரின் மகள் நடிகை வனிதாவிஜயகுமார்.அவருக்கும் நடிகர் ஆகாஷுக்கும் 2000 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே அவர்களுக்குப் பிறந்த குழந்தை விஜய்ஸ்ரீஹரி.

தற்போது வளர்ந்து வாலிபமாகியிருக்கும் அவர்தான்,ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் பிரபுசாலமன் இயக்கவிருக்கும் புதியபடத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான படம் சகுனி.அந்தப்படத்தில் சிறுவயது கார்த்தியாக சின்னவேடத்தில் நடித்திருத்திருக்கிறார் விஜய்ஸ்ரீஹரி.

பனிரெண்டு ஆண்டுகள் கழித்து அவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பேரன் விக்ரம்பிரபுவை அறிமுகம் செய்தவர் பிரபுசாலமன்.விக்ரம்பிரபு நடிப்பில் அவர் இயக்கிய கும்கி பெரும் வெற்றி பெற்ற படம்.

அதேபோல்,இப்போது விஜயகுமாரின் பேரன் விஜய்ஸ்ரீஹரியை அறிமுகம் செய்து அவர் இயக்கவிருக்கும் படமும் பெரியவெற்றி பெறும் என்பது சார்ந்தோரின் நம்பிக்கை.

அதேபோல் ஏராளமான படங்களைத் தயாரித்து வந்த ஒரு நிறுவனம் மீண்டும் வருகிறது.அந்நிறுவனம் நன்றாக இருந்தால் திரையுலகுக்கு நன்மை.எனவே அந்த நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பெரிய வெற்றி பெறவேண்டும்.இப்படத்தைத் தொடர்ந்து நிறையப் படங்கள் தயாரிக்கவேண்டும் என்பது திரையுலக மூத்தோரின் விருப்பம்.

Related Posts