சினிமா செய்திகள்

லைகா நிறுவனர் சுபாஸ்கரனுக்கு மணிரத்னம் கொடுத்த பிறந்தநாள் பரிசு

தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் இவ்வாண்டு கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில்,லைகா நிறுவனர் அல்லிராஜா சுபாஸ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் சில முதல்பார்வைகளை வெளியிட்டனர்.

விக்ரம்,கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா ஆகியோரின் முதல்பார்வைகள் வெளியிடப்பட்டுள்ளன,

அதோடு இப்படம் இவ்வாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்பே அறிவித்தபடி கோடை விடுமுறையில் படம் வெளியாகாதது ஏன்? என்றால், ஏப்ரல் 14 விஜய்யின் பீஸ்ட், ஏப்ரல் 28 கேஜிஎஃப் 2, மே 13 அன்று சிவகார்த்திகேயனின் டான் ஆகிய பெரிய படங்கள் வரிசையாக வெளிவரவிருப்பதால் இந்தப்படத்துக்குச் சரியான தேதி அமையவில்லை என்பதைவிட முக்கியமாக படம் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதனாலேயே மணிரத்னம் வைத்த கோரிக்கையை ஏற்று படத்தை நான்கு மாதங்கள் தள்ளிவைத்திருக்கிறார்களாம்.

Related Posts