சினிமா செய்திகள்

சீனுராமசாமி படத்தில் விஜய்சேதுபதியின் சம்பளம் மற்றும் நிதிநிலை விவரம்

‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ஐந்தாவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

இப்படம் மூலம் இயக்குநர் சீனுராமசாமி தயாரிப்பாளராகவும் ஆகிறார் என்று சொல்கிறார்கள். ஆம், கலைப்புலி தாணு தயாரிப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவர் படத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துவிடுவார், அதை வைத்துக் கொண்டு முதல்பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்துக் கொடுக்கவிருக்கிறாராம் சீனுராமசாமி.

இந்தப்படத்துக்காக கலைப்புலி தாணு இருபது கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்துவிடுவாராம்.அதை வைத்துக் கொண்டு படமெடுத்துக் கொடுக்கவேண்டியது சீனுராமசாமியின் கடமையாம்.

இத்தொகையில் சரிபாதி அதாவது சுமார் பத்துகோடி விஜய்சேதுபதிக்குச் சம்பளம் என்றும் மீதி பத்துகோடியில் படத்தை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சீனுராமசாமி முழுமையான திரைக்கதையை எழுதி வைத்துத் தயாராக இருப்பதால் திட்டமிட்டபடி, அந்தத் தொகைக்குள் படம் தயாராகிவிடும் என்கிறார்கள்.

Related Posts