சினிமா செய்திகள்

சிம்புவின் மாநாடு – தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துவருகிறார்கள்.

சுரேஷ்காமாட்சி தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது.இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கும் என்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட பேச்சுவாரத்தை நடந்திருக்கிறது.

புதிதாக வரவிருக்கும் சோனிலிவ் நிறுவனம் இப்படத்தை வெளீயிட முன்வந்து பேச்சுவார்த்தை நடந்ததாம்.

அப்போது தயாரிப்பாளர் சொன்ன விலைக்கும் சோனிலிவ் நிறுவனம் கொடுப்பதாகச் சொன்ன தொகைக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள்.

இதனால் பலமுறை பேசியும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் படத்தைத் திரையரங்குகளிலேயே வெளீயிடுவது என்கிற முடிவுக்குத் தயாரிப்பாளர் வந்திருக்கிறாராம்.

அப்படி எவ்வளவு விலை சொன்னாராம் தயாரிப்பாளர்? தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை இல்லாமல் இணையத்தில் மட்டும் ஒளிபரப்ப தயாரிப்பாளர் நாற்பது கோடி கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வளவு தொகை கொடுத்து படத்தை வாங்க சோனிலிவ் நிறுவனம் தயாராக இல்லை என்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துவிட்டது என்கிறார்கள்.

Related Posts