தக் லைஃப் – முதல் நான்கு நாட்கள் உண்மையான வசூல்

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கமலும் சிம்புவும் அப்பா மகனாக நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை,கமலின் ராஜ்கமல் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இவர்களுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்கியது.
மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஜூன் 5 ஆம் தேதி இப்படம் வெளியானது.
தமிழ்நாடெங்கும் சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில இப்படம் வெளியானது.
வெளியானதிலிருந்தே நிறைய எதிர்விமர்சனங்களைச் சந்தித்தது இந்தப்படம்.
இதுபோன்ற பெரிய படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்புப் பெறவில்லை என்றாலும் வசூலில் முன்னிலை பெறும் எனபது இயல்பு.
இந்தப்படம் வசூலிலும் யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் பின்தங்கிவிட்டது என்கிறார்கள்.
இது தொடர்பாக திரைப்பட வியாபார வட்டத்தினர் கூறுவதாவது…
கமல், சிம்பு, மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் என்கிற மிகப்பெரிய கூட்டணியில் உருவான படம், தமிழ்நாடு திரையரங்குகளில் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.
இவ்வளவு இருந்தும் இந்தப்படம் வசூலில் மிகவும் பின்தங்கிவிட்டது.
இப்படம் வெளியான முதல்நாள் ஜூன் 5 அன்று சுமார் 10.10 கோடி வசூல் செய்தது. அடுத்தநாள் அது 6.40 கோடியாக குறைந்துவிட்டது. மூன்றாம் நாள் சனிக்கிழமையன்று 7.40 கோடியும் ஞாயிறன்று 8.30 கோடியும் வசூல் செய்திருக்கிறது.
ஆக மொத்தம் தமிழ்நாட்டில் வெளியான முதல் நான்கு நாட்களில் இப்படம் வசூல் செய்த தொகை முப்பத்தியிரண்டு கோடியே இருபது இலட்சம் மட்டுமே வசூலித்திருக்கிறது.
இது மிக மிக குறைவான தொகை, இதற்காக கமல் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் மனம் வருந்தியிருப்பார்கள்.
இவ்வாறு வியாபார வட்டத்தினர் கூறுகிறார்கள்.