சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் கிஸ் வெளியீட்டுத்தேதி முடிவானது

கவின் நடிக்கும் படம் கிஸ்.நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது.

சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ் பணியாற்ற, சூர்யா ராஜீவன் கலை இயக்கம் செய்கிறார்.

இப்படம் தொடங்கும்போது அனிருத் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.அவர் பாடல்கள் கொடுப்பதில் தாமதம் ஆனதாலேயே படப்பிடிப்பும் தாமதம் என்றும் சொன்னார்கள்.

2023 ஆம் ஆண்டு இறுதியிலேயே இப்படத்துக்குப் பாடல்கள் கொடுத்துவிடுவார் அனிருத் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தது படக்குழு. 2023 முடிந்து 2024 முடியும் நேரத்திலும் அவரிடமிருந்து பாடல்கள் கிடைக்கவில்லை.ஆண்டுகள் கடந்த போதும் அனிருத்,இந்தப்படத்தில் கவனம் செலுத்தவில்லை.அதனால் இப்படக்குழுவினர் அவருக்குப் பதிலாக, இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினை நியமித்துவிட்டார்கள்.இவர் ஏற்கெனவே கவின் நடித்த டாடா படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.அப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படம்.

இப்படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆனதும் இப்படத்துக்கேற்ப இளமைத்துள்ளல் பாடல்கள் கொடுத்துவிட்டாராம் ஜென்மார்ட்டின்.

அதனால், முழுமூச்சாகப் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள்.விட்டு விட்டு நடந்தாலும் விடாமல் படப்பிடிப்பு நடந்தது.சனவரியில் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன், சிறந்த நடன இயக்கத்துக்கான தேசியவிருதை கடந்த ஆண்டு பெற்றார்.இவ்வாண்டில் இப்படம் மூலம் சிறந்த இயக்குநர் என்கிற பெயரைப் பெறுவார் என்று சொல்கிறார்கள்.

அதோடு, நடிகர் கவினுக்கு இப்படம் வசூல் ரீதியாகப் பெரியபடமாக அமைந்து அவருடைய சந்தை மதிப்பை உயர்த்தக் கூடிய படமாக இருக்கும் என்றும் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டார்கள்.

ஜூலை 25 வெள்ளிக்கிழமை அன்று இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வஅறிவிப்பு விரைவில வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

பலவேறு இடையூறுகளைத் தாண்டி வெளியாகும் இந்தப்படத்தை கவின் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related Posts