தமிழகம் முழுவதும் மார்ச் 1,2018 ஆம் தேதி புதிய படங்கள் திரையிடுவது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புகளும் கடந்த 16-ம் தேதி நிறுத்தப்பட்டது. சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இந்த முடிவை விமர்சித்து நடிகர் ரஜினிகாந்த்
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பிலிருந்தும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்
தமிழ்த்திரையுலகில் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை. மார்ச் 2, 9,16, ஆகிய மூன்று வெளியீட்டுத் தேதிகளில் எந்தப்படமும் வெளியாகவில்லை. 23 ஆம் தேதியும் வெளியாகிற மாதிரி தெரியவில்லை. இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் இந்தத் தேதிகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று
தமிழ்த்திரையுலகின் வேலை நிறுத்தம் தொடர்வதால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் தொழிலாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நெருக்கடி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார் விஷால். வேலைநிறுத்தம் தொடங்கியபின் முதன்
ஆன்மிகப் பயணமாக மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், 10 நாட்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 20) சென்னை திரும்பினார். சென்னை திரும்பியதும், அவர் வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் கூறியதாவது… புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார்
தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலிக்கின்றன. புதிய படங்களைத் திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள்
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிப்ரவரி 6,2018 அன்று வெளியிட்டுள்ள



















