காலா ரிலீஸ் சிக்கல் – தனுஷ் விஷால் மோதல்
தமிழ்த்திரையுலகில் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை.
மார்ச் 2, 9,16, ஆகிய மூன்று வெளியீட்டுத் தேதிகளில் எந்தப்படமும் வெளியாகவில்லை. 23 ஆம் தேதியும் வெளியாகிற மாதிரி தெரியவில்லை.
இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் இந்தத் தேதிகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால், ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிற ரஜினியின் காலா படமும் தள்ளிப் போகவேண்டும்.
ஆனால் ஏற்கெனவே சொன்னபடி ஏபரல் 27 இல் காலாவை வெளியிடுவோம் என்று தனுஷ் தரப்பு உறுதியாக இருக்கிறதாம்.
ஏனெனில், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் காலாவுக்காக சில படங்களைத் தள்ளி வைத்திருக்கிறார்கள். எனவே அந்தத் தேதியில் வெளியிடாவிட்டால் பெரும் குழப்பம் நேரும் என்பது அவர்களது வாதம்.
வேலைநிறுத்தம் எல்லோருக்கும் பொதுவாந்து எனும்போது அதன் இலாப நட்டங்களும் எல்லோருக்கும் பொதுவாகத்தானே இருக்கவேண்டும், ரஜினி படத்துக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்தால் மற்ற படங்கள் என்னாவது? எனவே முறைப்படிதான் வெளியீடு இருக்கவேண்டும் என்று பல்ரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.
என்ன நடந்தாலும் சரி, ஏப்ரல் 27 காலா ரிலீஸ் என்கிறது தனுஷ் தரப்பு.
என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.











