இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படம் 2020 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் அவர் இயக்கிய படம் பிசாசு 2. அந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதென்றும் தயாரிப்புநிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கலால் அப்படம் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே மிஷ்கின் முழுநேர நடிகர் போல
‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மகாராஜா’ உருவாகி வருகிறது.இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ்
ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பெரிய திரைகளில் வெளியாகிறது. இப்படத்தைக் காண்பதற்காக பார்வையாளர்களின் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. அதிலும் ஆக்ஷன் கலந்த டிரைலரைக் கண்டு ரசித்த பிறகு படத்தின் வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். இதற்கு இப்படத்தின் முன்பதிவுகளே சாட்சியாக இருக்கிறது. இந்நிலையில்
2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் கேட்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேசிய திரைப்பட விருதுக்கான ஆளுமைகளைத் தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது. அதில்,தெலுங்கில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ் (பார்ட் 1)’ படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜவான்.இப்படத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோன்,நயன்தாரா,விஜய்சேதுபதி,சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, கிரிஜா ஓக், சஞ்சீதா பட்டாச்சார்யா, லெஹர் கான், ஆலியா குரேஷி, ரிதி டோக்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தப்படத்துக்கு இசை அனிருத். ஜவான் திரைபடத்தை ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லிஸ்
கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும் ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள். இப்படத்துக்கு அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும்,
எஸ்தல் எண்டடெயினர் (Esthell Entertainer) நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் (இவர் இயக்குநர் சீனுராமசாமியின் தம்பி)இயக்கத்தில்,திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் “அழகிய கண்ணே”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடக
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி,விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல்பாகம் மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. ஆர்.எஸ்.இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம்பாகம் அடுத்த ஆண்டு சனவரியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. முதல்பாகம் பெரிய வெற்றி என்பதால் அடுத்த பாகத்திற்கான
ஈழத்தமிழ் ஏதிலிகளின் வலியைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர். 2000 ஆண்டுகளுக்குப் பின் நம் இனம் இப்படி ஒரு வலியைச் சந்திக்கும் என்று கணித்தாரோ கணியன்பூங்குன்றன்? அவர் அன்றைக்குச் சொன்ன சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது இந்தப்படம் பார்க்கும்போது புரியும். ஈழத்திலிருந்து தப்பி கேரளாவுக்கு வரும் விஜய்சேதுபதி, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய சூழலில்,
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் உருவாகும் படம் ஜவான். இப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேதிக்குள் படம் தயாராகாது என்பதால் செப்டம்பர் 7 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் வெளியான இந்த அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஷாருக்கானின் முகம்





















