செய்திக் குறிப்புகள்

ஜவானில் உண்மையான வில்லன் யார்? – விஜய்சேதுபதி வெளிப்படை

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பெரிய திரைகளில் வெளியாகிறது. இப்படத்தைக் காண்பதற்காக பார்வையாளர்களின் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. அதிலும் ஆக்ஷன் கலந்த டிரைலரைக் கண்டு ரசித்த பிறகு படத்தின் வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். இதற்கு இப்படத்தின் முன்பதிவுகளே சாட்சியாக இருக்கிறது.

இந்நிலையில் படம் குறித்து ஷாரூக் மற்றும் விஜயசேதுபதி ஆகியோர் படம் குறித்து பகிர்ந்தவை.

ஷாருக்கானுக்கான கேள்வி…..

அட்லீயும், நீங்களும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்ற விரும்புவது உண்மையா?

பிகில் படத்தின் தயாரிப்பின் போது நான் அட்லீயைச் சந்தித்தேன். அவர் சிஎஸ்கே மற்றும் கே கே ஆர் போட்டிகளுக்குச் சென்றிருந்தார். இதற்கு முன் அட்லீ என்னிடம் ஜவான் பற்றிய மூலக்கதையைச் சொன்னார். அத்துடன், ‘ஐயா..! ஐந்து பெண்களுடன் நீங்கள் நடிக்கிறீர்கள். இது எனது படம். என் மனைவி பிரியாவும், நானும் நிறையப் பெண்கள் கூட்டத்தில் இருக்கும்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் என்று உணர்கிறோம். உங்களுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றார். அப்படித்தான் ஜவான் தொடங்கியது.

மேலும் ஜவான் படத்தில் காளி வேடத்தில் நடிக்கும்
விஜய் சேதுபதிக்கான கேள்வி……

ஜவான் படத்தில் உங்களுக்கு வில்லன் வேடம் எப்படிக் கிடைத்தது? படத்தில் நீங்கள் உண்மையான வில்லனா? அல்லது ஷாருக்கானா?

ஷாருக்கிடம், ‘சார் நான் உங்கள் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன்’ என்றேன். அதற்கு ஷாருக், ‘கடந்த சில வருடங்களாக உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தோம்’ என்றார். அதனால் தான் இந்தப்படத்தில் இருவரும் இணைந்தோம்.
உண்மையான வில்லன் யார்? என்றால், இருவரும் அவரவர் வேடங்களில் நடிக்கிறோம். ஒருவருக்கொருவர் வில்லன்கள்.

ஷாருக்கானுக்கான கேள்வி……

நீங்கள் வில்லனா? அல்லது ஹீரோவா அல்லது வில்லனிக் ஹீரோவா? உங்களின் ரகசியத்தைப் பற்றி சொல்லுங்களேன்..?

இப்படத்தில் ஒரு சாதாரண மனிதர்- எல்லோருடைய பொது நலனுக்காக அசாதாரமான விசயங்களை செய்கிறார்.

விஜய் சேதுபதிக்கான கேள்வி…….

ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவம்?

ஷாருக் கான் நேர்காணலின் போது எப்படி புத்திசாலித்தனமாக கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிக்கிறார் என்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இரசித்திருக்கிறேன். அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி அறிந்து கொள்ள.. அவரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளன.

ஷாருக்கானுக்கான கேள்வி……

நீங்கள் ஒரு அதிரடி நாயகனா? அல்லது ஆயுள் காப்பீட்டுடன் உள்ள சாதாரண நபரா?

என் இன்சூரன்ஸ் பாலிசி முடிந்து விட்டது. பலமுறை காயம் அடைவதால் எனக்கு யாரும் காப்பீடு செய்ய விரும்பவில்லை. நான் ஆக்ஷன் படங்களை விரும்புவதற்கு ஒரே காரணம்.. என்னுடைய இளைய மகன் ஆப்ராம். அவர் ஆக்சன் -அனிம் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் கொண்ட படங்களைப் பார்க்க விரும்புவதால்.. அவருக்காக ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

விஜய் சேதுபதிக்கான கேள்வி…….

இவ்வளவு அழுத்தமான வில்லன் வேடத்திற்கு நீங்கள் எப்படி தயாரானீர்கள்?

திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நான் வல்லவன் என்பது எனக்குத் தெரியும். வேறு எதையும் என் தலைக்குக் கொண்டு செல்ல விரும்பவில்லை. நான் செய்ய விரும்பாத வேடத்தைச் செய்தால்.. அது என் மனதைக் கெடுத்து விடும் என்று நம்புகிறேன்.

ஷாருக்கானுக்கான கேள்வி…….

ஜவானில் நடிக்க ஒப்புக்கொண்ட தருணம் குறித்து…?

நான் மொட்டை ஹீரோவாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு காட்சி இருக்கிறது. அப்போது இயக்குநர் அட்லீ என் கையில் நிறைய பவுடரைக் கொட்டியது எனக்கு நினைவிருக்கிறது. நான் அந்தக் காட்சியிலும் நடித்தேன். ஆனால் நான் இறுதியாக அந்தக்காட்சியைப் பார்த்தபோது மறக்க முடியாததாக இருந்தது. ஜவான் படத்திற்கான எனது தருணம் அதுதான். படத்தில் இதைவிட நிறைய இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts