அங்காடித் தெரு, வெயில்,அரவான் காவியத்தலைவன் என பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் வசந்த பாலன். இவர் இப்போது ஜி.வி பிரகாஷ் குமார்,அபர்நதி,நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா,ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் ஜெயில் படத்தை இயக்கியிருக்கிறார். வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன.அவற்றில் ஒன்று இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம். இந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது ‘டிஜி பிலிம்
இயக்குநர் ஷங்கரிடம் ‘ஐ’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து ‘4ஜி’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்துக்காக தனது பெயரை வெங்கட் பக்கர் என்று மாற்றியிருந்தார். சி.வி.குமார் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் இசை என இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இந்த முடிவு ஏற்படுவதற்கு முன்பாக பல இயக்குநர்கள் விஜய்க்குக் கதை சொல்லியிருக்கிறார்கள்.அந்த இயக்குநர்கள் பட்டியலில் சுதா கொங்கராவும் இருந்தார். அவர் கூறியுள்ள கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகக்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் ஏகாதசி எழுதிய ஒரு பாடல் அண்மையில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அப்பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. மண்ணு உருண்ட மேல மண்ணுருண்ட மேல மனுச பைய ஆட்டம் பாரு ஆட்டம் பாரு ஆட்டம் பாரு
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் . தனுஷின் 43 ஆவது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும்
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை இன்று கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் தனது அடுத்த கதைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நாயகன் சூர்யா. சூர்யாவுக்கு இது நாற்பதாவது படம். பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாகக் கொண்டு அசுரன் திரைப்படம் உருவானது. இந்நிலையில், நேற்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கிறார். இதேபோல் கௌதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதளத் தொடராகத் தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும்
இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யாவின் 38 ஆவத் படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் பூசை 2019 ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன்



















