2019 இல் அஜீத்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரஜினியுடன் அவர் நடித்த தர்பார் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய திரைப்பட விருது விழாவில், அனைவருக்கும் பிடித்த நடிகை மற்றும் மறைந்த நடிகை
தீபாவளியை முன்னிட்டு 2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் விஜய் நடித்த பிகில். வெளியாகி இன்னும் நூறு நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு சனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அடுத்த நாள் சனவரி 16 அன்று மாலை 6.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த
2019 ஆம் ஆண்டில் நடிகை நயன்தாரா ஏழு படங்களில் நடித்துள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் சனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அஜீத் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் என்கிற பெருமையைப் பெற்ற படமாக அமைந்தது. மார்ச் 28 ஆம் தேதி நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஐரா திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தில் நயன்தாராவின்
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு, ஐதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. முதற்கட்டப் படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்களாம்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார். இதற்காகத் தன் உடலமைப்பை
இந்த டிசம்பர் மாதம் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றன. அதேபோல ஐந்து பெரிய படங்கள் இம்மாததில் தொடங்கவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. டிசம்பர் ஆறாம் தேதி, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். டிசம்பர் 12 அன்று மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில்
நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவருடைய கலைப்பயணத்தின் 60 ஆம் ஆண்டு ஆகியனவற்றைக் கொண்டாடும் விதமாக, கலைநிகழ்ச்சியொன்றை நடத்தியது ராஜ்கமல் நிறுவனம். நேற்று மாலை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய்
விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அறிவித்தபடி நேற்று காலை வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக அப்படம் வெளியாகவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிறுவனம், விஜய் நடித்த பைரவா, அஜீத் நடித்த வீரம் உட்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம்.வீரம் படத்தால் ஏற்பட்ட நட்டமும் சங்கத்தமிழன்
நவம்பர் ஏழாம் தேதி நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள். அதோடு அவர் திரைத்துறைக்கு வந்து அறுபது ஆண்டுகள் ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் (1960) வெளியாகி 60 ஆண்டுகள் ஆகின்றன. கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு
அழகி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் ஜார்ஜ் மரியான். நகைச்சுவை மற்றும் சிறுசிறு துணை கதாப்பாத்திரங்களில் தலைகாட்டுபவர். இந்த தீபாவளியை ஒட்டி வெளியான விஜய்யின் “பிகில்”,கார்த்தியின் “கைதி” ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருகும் இவர், “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர்கொண்டபார்வை படம் வெளியானது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தையும் இதே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என்றும் இதே இயக்குநர் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதன்பின் அந்தப்படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில் இன்று திடீரென இசையமைப்பாளர்























