அஜீத் படத்தில் நடிக்கிறேனா? – பிரசன்னா விளக்கம்
நடிகர் பிரசன்னா கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் அவர் வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.
இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியிருப்பதாவது….
வலிமை படத்தில் நான் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பேச்சு நடந்தது. நானும் மிக ஆர்வமாக இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த வாய்ப்பு இப்போது கிடைக்கவில்லை. இருந்தாலும் எனக்கு வரும் காலங்களில் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பு இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.











