September 11, 2026
Uncategorized செய்திக் குறிப்புகள்

தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹரீஷ் நடிப்பது இதனால்தான்

இயக்குநர் நடிகர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய்பாரதி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’.

இப்படத்தின் பெயரை படத்தில் நாயகனாக நடிக்கும் ஹரீஷ்கல்யாண் அறிவித்தார்.

தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தைப் பற்றி இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது….

நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை வைத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பத்திரிகைகளிலோ அல்லது காலையில் தொலைக்காட்சியிலோ ஆர்வத்தோடு ராசி பலனைப் பார்க்கிறோம்.

ஆத்திகரோ, நாத்திரகரோ, கடுமையாக நம்பிக்கை அல்லது வேடிக்கையாகவாவது அதை கவனிக்கிறார்கள்.

‘தனுசு ராசி நேயர்களே’ என்று பெயரிடக் காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. இப்பட நாயகன் ஹரீஷ் கல்யாண் தனுசு ராசிக்காரர் தான். (இதனால்தான் இந்தப்படத்தில் நடிக்க,ஹரீஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார்)

இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது இலட்சிய நோக்கத்ததைக் குறிக்கிறது. இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது.

எங்கள் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க ஒப்புக் கொண்டதை விடவும், வேறுபட்ட கதையம்சம் உள்ள திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அவரது முந்தைய படங்கள் ரோம்-காம் மற்றும் ஆழ்ந்த காதல் கதையை அடிப்படையாகக் கொண்டவை. அவர் நினைத்திருந்தால் அது போன்ற படங்களில் நடித்து வெற்றியைக் கொடுத்திருக்க முடியும். ஆனாலும், இது போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க முயற்சி செய்கிறார்.

ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள், அவர்களை இறுதி செய்து வருகிறோம். என்னுடைய இந்த ஸ்கிரிப்ட்டை உறுதியாக நம்பி, அதை திரைப்படமாக்க எனக்கு உதவியாக இருக்கும் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்

இவ்வாறு சஞ்சய்பாரதி கூறினார்.

Related Posts