சினிமா செய்திகள்

நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜாலியா இருக்க நாம செலவு செய்யணுமா? – தயாரிப்பு நிறுவனம் புலம்பல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 அன்று மும்பையில் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

சுமார் ஒரு மாதம் வரை அங்கு நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

ஏப்ரல் 10 முதலே நாயகியாக நடிக்கும் நயன்தாராவும் படப்பிடிப்பில் இருக்கிறாராம். அதற்காக ஏப்ரல் 9 ஆம் தேதி புறப்ப்ட்டு மும்பை செல்லவிருக்கிறாராம் நயன்தாரா.

இது ஒரு புறமிருக்க, இதே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார் விக்னேஷ்சிவன்.

நயன்தாரா படப்பிடிப்புக்காக மும்பை செல்வது முடிவானவுடன், சிவகார்த்திகேயன் படத்தின் கதை விவாதம் தொடர்பாக மும்பை செல்லவேண்டும், எனக்கு அங்கே தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டாராம் விக்னேஷ்சிவன்.

இயக்குநர் கேட்பதைச் செய்து கொடுத்தாக வேண்டுமே? எனவே பல இலட்சங்கள் செலவு பிடிக்கக் கூடிய,அவர் கேட்ட வசதிகளைக் கொடுத்துவிட்டிருக்கிறார்கள். நயன்தாரா புறப்படுவதற்கு முன்பாகவே அவர் புறப்பட்டுச் செல்கிறாராம்.

இவர்கள் இருவரும் ஜாலியாக இருக்க நம்ம கம்பெனி செலவு செய்யவேண்டியிருக்கு என்று லைகா நிறுவனத்தினர் வருத்தப்படுகிறார்களாம்.

Related Posts