சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் கதை திருட்டுக்கதையா? – வெடித்திருக்கும் சர்ச்சை

தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது கதைத் திருட்டு புகார் எழுந்து பரபரப்பு ஏற்படும். அந்த வரிசையில் இப்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாகவும் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிஷங்கர் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் விருமன் படம் சேர்ந்துள்ளது. இந்தப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இப்படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குநர் துரை என்பவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தாராம். ஆனால் சங்கத்தினர் தனக்கு நியாயம் செய்யாமல் சூர்யா கார்த்தி ஆகியோருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார். அதோடு இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அவர், எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்…..

விருமன் கதை திருட்டு புகார் மனு திரு.தலைவர் அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் முகவரிக்கு India post Speஎd post with Ad card வுடன் அனுப்பிவிட்டு நிர்வாகிகளுக்கும் போனில் தகவல் கொடுத்தேன்விருமன் கதை திருட்டு புகார் மனு என்பதை நன்கு தெரிந்து கொண்டு 2D Entertainment pvt ltd தயாரிப்பாளர் நடிகர் திரு.சூர்யா அவரது உடன்பிறந்த தம்பி திரு.கார்த்தி இவர்களது மிக நெருங்கிய உறவினரான தயாரிப்பாளர்கள் திரு.SR.பிரபு ,திரு.K.E.Ganavel Raja,இயக்குநர் திரு.முத்தையா ஆகியோருடன் எழுத்தாளர்கள் சங்கம் நிர்வாகி சிலர் லஞ்சம் பணம் மற்றும்  பொருள்களாகவும் பெற்றுக்கொண்டு முன்பு விருமன் கதை திருட்டு புகார் மனு என நன்கு தெரிந்து எனது கதை திருடப்பட்டது நன்கு தெரிந்தும் மேற்படி எனது புகார் மனுவை திட்டமிட்டு சங்கம் நிர்வாகிகள் சிலரும் சேர்ந்து Speed post தபால் வாங்க மறுத்து 23/03/2022Refused செய்து அனுப்பிள்ளனர் சங்கத்தில் கட்ட பஞ்சாயத்து கதை திருட்டு மாபியா கும்பலுடன் கை கோர்த்து கொண்டு திரு.விக்ரமன் படத்தில் வரும் RR ல லா லா லா சரவணபன் தயிர் சாதம் thalappakattu பிரியாணி வாசத்துடன் ஒவ்வொரு நாளும் நிறைவு பெறுகிறது நண்பர்களே நான் கட்ட பஞ்சாயாத்து சங்கம் பற்றியும் மாபியா கதை திருட்டு கும்பலுடன் கை கோர்த்து கொண்டு இருக்கும் உண்மையைய் எடுத்து கூறவும் விருமன் எனது கதை திருடி திரைப்படத்தை வெளியிட தடை செய்வது கேட்டு மாண்புமிகு உயர்நீதிமன்றம் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளேன் என் சக சொந்தங்களான உறுப்பினர் நண்பர்களுக்கு தெரிவிப்பது எனது கடமை.

அன்புடன் துரை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts