ரஜினி பற்றிய பேச்சு உதயநிதி மறுப்பு
சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதிராவ்ஹைதாரி,நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கின்றன.
இந்நிலையில் அப்படக்குழுவினரின் நன்றி அறிவிப்புக்கூட்டம் சனவரி 31 ஆம் தேதி மாலை நடந்தது.
நிகழ்வில்,மிஷ்கின்,
உதயநிதி,நித்யாமேனன்,ரேணுகா,சிங்கம்புலி,நரேன்,ராஜ்குமார், பாடலாசிரியர் கபிலன், தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் உள்ளிட்டோரோடு விநியோகஸ்தர்கள் சிலரும் திரையரங்குக்காரர்கள் சிலரும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் பேசிய ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி எனும் திரைய்ரங்குக்காரர், தர்பார் பட்டாஸ் ஆகிய படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது இப்படம் வெளியானது. அவற்றைத்தாண்டி இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. அந்தவகையில் இது தர்பாரை வீழ்த்தியிருக்கிறது என்றார்.
சீனு என்கிற விநியோகஸ்தர் பேசும்போது, தர்பார் பட்டாஸ் ஆகிய படங்களைத்தாண்டி இவ்வாண்டின் முதல் வெற்றிப்படம் இதுதான் என்றார்.
இவற்றிற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய உதயநிதி, தர்பார் தொடர்பாக இவர்கள் பேசியதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. என் படம் வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி என்றார்.











