சினிமா செய்திகள்

தர்பார் நட்டம் இந்தியன் 2 க்கு நெருக்கடி

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த
படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார் ஷங்கர்.

கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது.அப்போது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்றது.

அதன்பின் பல சிக்கல்களைக் கடந்து 2019 ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கியது. 

கமலுக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் சில காலம் தாமதத்துக்குப் பின் இப்போது படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. 

படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கு காப்பான், தர்பார் உள்ளிட்ட படங்களில் ஏற்பட்ட நட்டம் காரணமாக இப்படத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாம். 

இதனால் குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து வெளியிட்டாக வேண்டும் என்கிற கட்டாயம் ஷங்கருக்கு ஏற்பட்டுள்ளது.

2020 ஏப்ரலுக்குள்  மொத்த படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சொன்னதாகவும் அதற்குள் கண்டிப்பாக முடியாது ஜூன் மாதத்தில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடுகிறேன் என்று ஷங்கர் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்காரணமாக முன்னெப்போதையும் விட இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது என்கிறார்கள்.

Related Posts