கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத்தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனதின் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் விருமன்.இயக்குநர் முத்தையா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிசங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்திருக்கிறார்.
இப்படம், 2021 செப்டம்பர் 6 அன்று பூஜை போடப்பட்டு செப்டெம்பர் 18 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கியது.
படப்பிடிப்பு முழுமையடைந்து இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று மாலை 2டி நிறுவனம், இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.











