பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த மம்முட்டி.ஏன்?
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.
விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆனாலும் இன்னும் பல வேடங்களுக்கு நடிகர்களை இறுதிசெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.
பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சம்பள விசயத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஆகியனவற்றால் அவர் விலகிக் கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.
அதன்பின் அந்த வேடத்தில் நடிக்க சிலரைத் தொடர்பு கொண்டனராம். ஆனால் சரியாக அமையவில்லையாம். அதன்பின் நடிகர் மம்முட்டியைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள்.
உடனே அவர் பொன்னியின்செல்வன் கதையைப் படித்துப் பார்த்திருக்கிறார். அதில் பழுவேட்டரையர் வேடம் அவரைக் கவர்ந்திருக்கிறது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டு மணிரத்னத்திடம் திரைக்கதையைக் கேட்டிருக்கிறார்.
அந்தத் திரைக்கதையில் பழுவேட்டரையர் வேடம் மிகவும் சுருக்கப்பட்டு அதன் மதிப்பு குறைக்கப்பட்டிருந்ததாம்.
இதனால் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லிவிட்டாராம் மம்முட்டி.











