Uncategorized

அஜீத்துக்கு வேண்டுகோள் – கஸ்தூரிக்குக் கண்டனம்

சமூகவலைதளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு தரங்கெட்ட சொற்களைப் பயன்படுத்துவதும் அநாகரிக கருத்துகளை வெளிப்படுத்துவதும் தொடர்கிறது.

அண்மையில் அஜீத் புகைப்படத்தை வைத்திருக்கும் டிவிட்டர் பதிவொன்றில் மிக ஆபாசமான கருத்து பதிவிடப்பட்டது. அதில் நடிகை கஸ்தூரியின் பெயரும் இடம்பெற்றது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி, மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க.

என்று பதிவிட்டிருந்தார்.

அதோடு, ஆபாச ட்வீட் செய்த அஜித் ரசிகர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திலும் புகாரளித்துள்ளார்.

இதனால் சிலர், உண்மையான அஜித் ரசிகர்கள் இப்படி பதிவிட மாட்டார்கள் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வார்த்தை யுத்தம் தீவிரமடைந்திருக்கும் நிலையில்,
‘அஜித் சார் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்தும் பலர், யாரோ ஒருவர் செய்யும் தப்புக்காக அஜீத்திடம் வேண்டுகோள் வைப்பதா? என்று கஸ்தூரியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Related Posts