Uncategorized

உலகத் திரையுலகில் முதன்முறையாக… – கண்ணகி பட ஆச்சரியம்

அண்மையில் கண்ணகி என்றொரு படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது.

புதுமுக நடிகர் நடிகைகள் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடிக்கவிருக்கிறார்களாம்.

துணைக் கதாபாத்திரங்களில் முகம் தெரிந்த புகழ் பெற்ற நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஷான் ரகுமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பை சரத் கவனிக்கிறார்.
ஸ்கைமூன் எண்டர்டெயிண்ட்மெண்ட் எனும் நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறது.

இவர்கள் பெயரையல்லாம் முதல்பார்வை வெளியிடும்போது படத்தின் இயக்குநர் யார் என்பதை அறிவிக்கவில்லை.

இயக்குநர் இல்லாமல் ஒரு படமா? இருக்கவே முடியாதல்லவா?

அப்புறம் ஏன் அறிவிக்கவில்லை?

இந்தப்படத்தை எழுதி இயக்கிக் கொண்டிருப்பது புது இயக்குநர் யஷ்வந்த்.

இவர் இயக்குநர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவராம்.

இவர்தான் முதல்பார்வை உட்பட எதிலும் என் பெயர் இடம்பெறக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.

படத்தைப் பார்த்துவிட்டு யார் இந்தப்பட இயக்குநர்? என்பதை மற்றவர்கள் கேட்கும் படி இருக்கவேண்டும் என்பது அவருடைய ஆசை என்கிறார்கள்.

முதன்முறை படம் இயக்கும் ஒருவர் நல்ல இயக்குநர் என்று நிருபித்தபின்தான் என் பெயரையே வெளியே சொல்வேன் என்று சொல்லியிருப்பது விந்தையாக இருக்கிறது.

Related Posts