சினிமா செய்திகள் நடிகை

2019 நயன்தாராவுக்கு எப்படி இருந்தது?

2019 ஆம் ஆண்டில் நடிகை நயன்தாரா ஏழு படங்களில் நடித்துள்ளார். 


ஆண்டின் தொடக்கத்தில் சனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அஜீத் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் என்கிற பெருமையைப் பெற்ற படமாக அமைந்தது.


மார்ச் 28 ஆம் தேதி நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஐரா திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தில் நயன்தாராவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் படம் ஓடவில்லை.


மே 17 ஆம் தேதி சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த மிஸ்டர் லோக்கல் படம் வெளியானது. அண்மைக்கால சிவகார்த்திகேயன் படங்களில் மிகக் குறைந்த வசூல் என்கிற பெயரோடு இப்படம் தோல்வி அடைந்தது.


ஆகஸ்ட் 9 ஆம் தேதி நயன்தாராவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கொலையுதிர்காலம் படம் வெளியானது. இந்தப்படமும் பெரிதாக ஓடவில்லை.


செப்டம்பர் 5 ஆம் தேதி நிவின்பாலி ஜோடியாக நயன்தாரா நடித்த லவ் ஆக்‌ஷன் டிராமா என்கிற மலையாளப் படம் வெளியானது. இந்தப்படமும் சரியாகப் போகவில்லை.


அக்டோபர் 2 ஆம் தேதி தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த சைரா நரசிம்மாரெட்டி என்கிற தெலுங்குப்படம் வெளியானது. தமிழிலும் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியான இந்தப்படமும் பெரிதாகப் போகவில்லை.


அக்டோபர் 25 ஆம் தேதி விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த பிகில் படம் வெளியானது. படம் சரியில்லை என்கிற பேச்சு வந்தபோதும் வசூலில் இவ்வாண்டின் முதலிடத்தை அந்தப்படம் பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.


ஆக மொத்தம் இவ்வாண்டு நயன்தாரா நடித்து வெளியான ஏழு படங்களில் இரண்டு மிகப்பெரும் வெற்றி என்பதாலும் மற்ற படங்கள் ஓடவில்லையென்றாலும் நயன்தாராவின் நடிப்புக்கு வரவேற்பு இருந்ததால் அவருக்கு 2019 உற்சாகமான ஆண்டு என்பதில் மாற்றமில்லை/

Related Posts