செய்திக் குறிப்புகள்

விஜய் 64 பட முக்கிய அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்

விஜய்யின் 64 ஆவது திரைப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில்  சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் .

அனிரூத்  இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவினை சத்யன் சூரியனும் படத்தொகுப்பினை  பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் .

இப்படத்தில் விஜய் சேதுபதி,அர்ஜுன் தாஸ் , சாந்தனு, அழகன் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் .

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் தளபதி 64 என்றழைக்கப்படும் இப் படத்தின் முதல் பார்வை வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இந்தத் தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Related Posts