சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக எழுப்பப்படும் முக்கியமான 8 கேள்விகள்

துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.

இதனிடையே ஸ்ரீதேவியின் மரணத்தை முன்வைத்து பல்வேறு விடை தெரியாத கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போதுதான் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய உண்மைகளும் தெரிய வரும்.

1.திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு மும்பை வந்த போனிகபூர், ஸ்ரீதேவி இறந்தநாளில் அங்கு போனது எதனால்?

2.ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு போனி கபூர் எத்தனை மணிக்கு வந்தார்? எத்தனை மணிக்கு ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக போலீசாருக்கு போனி கபூர் தெரிவித்தார்?

3.ஸ்ரீதேவியின் மரணம் எத்தனை மணிக்கு நிகழ்ந்தது? குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் எனில் ஏற்கனவே அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்ததா?

4.ஸ்ரீதேவி இறந்து கிடந்ததாக கூறப்படும் குளியல் அறையின் கதவை போனி கபூர் எப்படி உடைத்தார்? அல்லது அந்த கதவு திறந்தே கிடந்ததா?

5.ஸ்ரீதேவி மது அருந்தி இருந்தார் என கூறப்படுகிறது. மது பாட்டில், மது குடிக்கும் கிளாஸ் ஆகியவை ஸ்ரீதேவி அறையில் இருந்தனவா?

6.மதுமயக்கத்தில் தண்ணீரில் விழுந்தால் போதை தெளியாதா?

7.ஸ்ரீதேவியின் மரணம் சர்ச்சையாகும் நிலையில் அவரது செல்போன் எண்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதா? அவர் கடைசியாக யாரிடம் பேசினார்?

8.போனிகபூர் காவல்துறையிடம் சொல்வதற்கு முன்பாக அறைக்கு அழைத்த நண்பர் யார்?

இப்படிப் பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

Related Posts