சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் பெருந்தன்மை

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் நிர்வாகியாக இருப்பவர் சிவா ஆனந்த். இவர் ஓர் இயக்குநரும் கூட.

தெலுங்கில் ஒரு படம் இயக்கியிருக்கும் இவர் அண்மையில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் பாடல்கள் எழுதியிருந்தார்.

இவர் இப்போது தனியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம்.

மணிரத்னம் இயக்கிய இந்திப்படங்களில் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றி அதன்பின், அலைபாயுதே படத்தின் இந்திப்பதிப்பு உட்பட இந்தியில் பல படங்களை இயக்கியவர் ஷாத் அலி. 

இவருடைய இயக்கத்தில் தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளிலும் வெளியாகும் வண்ணம் ஒரு புதிய படம் தயாராகவிருக்கிறது.

அந்தப்படத்தைத்தான் சிவா ஆனந்த் தயாரிக்கிறார்.

பொன்னியின்செல்வன் படத்தின் நிர்வாக வேலைகளையும் பார்த்துக் கொண்டு இந்தப்படத்தைத் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அந்தப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

தம்மிடம் ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் சிவா ஆனந்த் சொந்தமாகப் படம் தயாரிக்கிறார் என்று தெரிந்தும் அதை மிகப் பெருந்தன்மையுடன் அனுமதித்திருக்கிறார் மணிரத்னம். நல்ல விசயம்தான்.

Related Posts