சினிமா செய்திகள்

கவிஞர் கபிலன் பேச்சு ரஜினி பதில் – காப்பான் பாடல்விழா சுவாரசியம்

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,சாயிஷா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “காப்பான்”. ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் ஜூலை 21 மாலை நடைபெற்றது.

விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Kabilan - Rajinikanth

Kabilan – Rajinikanth

காப்பான் படத்தில் குறிலே குறிலே குயிலே என்கிற பாடலை எழுதிய கவிஞர் கபிலன் பேசும்போது,

படம் குறித்தும் பாடல் குறித்தும் பேசிவிட்டு, புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியது தமிழ்நாட்டுக்குக் கேட்டது, (அதன்பின் அது பற்றிய விவாதங்கள் நடக்கின்றன),அதையே நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தால், அது பிரதமர் மோடிக்கும் கேட்டிருக்கும், எனவே மாணவர்கள் நலன் காக்க ரஜினியும் அதுபற்றிப் பேசவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்,

புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்குக் கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என்றார்.

Related Posts