சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸா? அட்லியா? உச்சகட்ட குழப்பத்தில் விஜய்

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் அதன் இயக்குநர் பற்றிப் பல செய்திகள் வந்துவிட்டன். 
அவருடைய அடுத்த படத்தை இயக்குபவர் இவர்தான் என்று இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பெயர்கள் வந்துவிட்டன.

இந்நிலையில், இப்போது பேசப்படுகிற விசயம் என்னவென்றால், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது உறுதி என்றும் அந்தப்படத்தை இயக்கவிருப்பது ஏ.ஆர்.முருகதாஸ் என்றும் முடிவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதேநேரம், இயக்குநர் அட்லி குழுவினர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது அட்லிதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால் இதுவரை விஜய் தரப்பில் சொல்லப்படுகிற செய்தி, அடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸா? அட்லியா? என முடிவெடுக்க முடியாமல் விஜய் தடுமாறுகிறார் என்கிறார்கள்.

எப்படியிருப்பினும் இன்னும் சில நாட்களில் அதாவது மாஸ்டர் பாடல் வெளீயீட்டு விழா முடிந்ததும் விஜய்யின் அடுத்தபடம் பற்றிய அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள்.

Related Posts