சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிடும் புதியபடம் – விவரங்கள்

உறியடி, உறியடி 2 ஆகிய படங்களை இயக்கி நடித்தவர் விஜய்குமார். அப்படங்களுக்கு அடுத்து சூர்யா நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனம் எழுதியிருந்தார்.

அவர் மூன்றாவதாக புதிய படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.இந்தப்படத்தை அவர் இயக்கவில்லை.நாயகனாக மட்டும் நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்கி வருகிறார். இவர் உறியடி,உறியடி 2 ஆகிய இரண்டு படங்களிலும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் விஜய்குமாருக்கு இணையராக புதுமுகம் அர்ஷா நடித்துள்ளார்.இவர்களுடன் சங்கர் தாஸ், அவினாஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பிரிட்டோ,படத்தொகுப்பாளராக கிருபாகரன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 16,2021 அன்று சென்னையில் தொடங்கியது. ஜூலை 2,2022 இல் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்துள்ளனர்.

ஓராண்டுக்குப் பிறகு அந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் லோகேஷ்கனகராஜுக்குப் படம் மிகவும் பிடித்துவிட்டதாம். படத்தில் சிற்சில மாற்றங்கள் செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று அவர் சொன்னதைப் படக்குழு ஏற்றுக்கொண்டதாம்.

இதனால், இந்தப்படத்தை நானே திரையரங்குகளில் வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று லோகேஷ்கனகராஜ் கூறியிருக்கிறார்.

இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றிவருகிறார்கள்.

லியோ படம் வெளியானவுடன் இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை குறித்த செய்திகள்,நிகழ்வுகள் அதன்பின் வெளியீடு ஆகியன நடக்கும் என்கிறார்கள்.

படப்பிடிப்பே ஒராண்டு அதற்குப் பிறகான பணிகளில் ஓராண்டு என ஈராண்டுகள் போனாலும் தரமான படைப்பாக உருவாகிப் பெரும் வரவேற்புப் பெற்றிருப்பது அப்படத்துக்கு மட்டுமின்றி திரையுலகுக்கும் நற்செய்தி என்கிறார்கள்.

Related Posts