சினிமா செய்திகள்

ஷங்கருடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ் – பரபரக்கும் புதிய தகவல்

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது.

இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியானது.

அதில், இயக்குநர் ஷங்கர் – தெலுங்கு நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது.

பிப்ரவரியிலேயே அறிவிக்கப்பட்டாலும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. அதற்கிடையே இந்தியன் 2 வை முடித்துக் கொடுப்பது சம்பந்தமான பேச்சுகளும் இருக்கின்றன.

இவை ஒரு பக்கம் இருந்தாலும் ஷங்கர் ராம்சரண் கூட்டணியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் இணைந்திருக்கிறார் என்கிற பரபரப்புத் தகவல் திரையுலகில் உலவுகிறது.

ஷங்கர் படத்தில் அவர் என்ன செய்யப்போகிறார்?

அந்தப்படத்துக்கான கதையை எழுதியிருப்பது கார்த்திக் சுப்புராஜ்தான் என்கிறார்கள்.இப்போது திரைக்கதை எழுதும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எழுத்தாளர் சுஜாதா மறைவுக்குப் பிறகு இயக்குநர் ஷங்கருக்கு சரியான துணை அமையாமல் தடுமாறுகிறார் என்று சொல்லப்படுவதுண்டு. இப்போது கார்த்திக் சுப்புராஜ் கதை, திரைக்கதை, வசனம் ஆகியனவற்றில் ஷங்கருக்குப் பலமாக அமைந்திருக்கிறார் என்றும் இருவருடைய சிந்தனைகளும் இணைகிற இந்தப்படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என்றும் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

பார்ப்போம்.

Related Posts