மணிரத்னம் கட்டளையை மீறும் கார்த்தி
விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் அடுத்து கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும் அப்பா மகன் ஆகிய இருவேடங்களில் அவர் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறதாம்.
கார்த்தி இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று மணிரத்னம் உத்தரவிட்டிருக்கிறாராம்.
ஆனால் அதையும் மீறி ஏப்ரலில் புதிய படத்தைத் தொடங்க கார்த்தி முடிவு செய்திருக்கிறாராம். அதற்குக் காரணம், பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் தோற்றத்திலேயே மித்ரன் படத்திலும் ஒரு வேடம் இருப்பதால் ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.











