வந்தியத்தேவனாக வசந்த்ரவி – பொன்னியின்செல்வன் அப்டேட்
பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டுடைமையாக்கப் பட்ட இந்த நாவலைப் திரைப்படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோர் முயன்றார்கள்.
ஆனால் அது நடக்கவில்லை. இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார்.
இந்த நேரத்தில் பொன்னியின் செல்வனை இணையதள தொடராக எடுக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் எம்.எக்ஸ்.பிளேயர் நிறுவனமும் இணைந்து இதைத் தயாரிக்கிறது.
இத்தொடரில் வந்தியத்தேவனாக வசந்த்ரவி நடிக்கிறார். குந்தவையாக பிரியாபவானிசங்கர் நடிக்கவிருக்கிறார். நந்தினி வேடத்தில் ரெபாமோனிகா நடிக்கிறாராம்.
இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கவிருக்கிறதாம்.










