September 13, 2026
Uncategorized

கைதி இந்தி ரீமேக் உரிமைக்கு இவ்வளவு தொகையா?

2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது.

எஸ்.ஆர்.பிரபு தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாயகி இல்லை, பாடல் இல்லை, ஒரே இரவில் நடக்கும் கதை போன்ற வித்தியாசமான அம்சங்களுடன் இந்தப் படம் உருவானது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமைக்காக நான்கு கோடி, ஐந்து கோடி என்று தொடங்கி இப்போது பதினெட்டு கோடி வரை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.

இப்படம் இங்கும் நன்றாக ஓடி பெரிய இலாபம் சம்பாதித்துக் கொடுத்தது. இப்போது இந்தி ரீமேக்குக்காக இவ்வளவு தொகை கொடுக்கத் தயாராகியிருக்கிறார்கள் என்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts