Uncategorized சினிமா செய்திகள்

கமலின் 232 ஆவது படத்தைத் தயாரிக்கும் புதிய தயாரிப்பாளர்

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று தெரியவில்லை. இந்நிலையில், தற்போது அவர் பிக்பாஸ் தொலைக்காட்சித் தொடரை தொகுத்து வழங்கி வருகிறார்.

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232 ஆவது படமாகும்.

கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்தப்படத்துக்கான புகைப்படப் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது.

இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப்படத்தைத் தயாரிப்பது டர்மெரிக் மீடியா என்கிற புதிய பட நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது.

ஒரு புதியபட நிறுவனத்தின் தயாரிப்பில் கமல் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?

விஜய்தொலைக்காட்சியில் நிர்வாகியாக இருந்த மகேந்திரன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக கமலிடம் பணிபுரிந்து வருகிறாராம்.

கமலின் திரைப்படப் பணிகள் மட்டுமின்றி அரசியல்கட்சி தொடர்பான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

அவருக்கு உதவி செய்யும் விதமாக இந்தப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்திருக்கிறாராம் கமல்.

தன்னிடம் பணியாற்றுபவரைத் தயாரிப்பாளராக உயர்த்தி இருக்கும் கமலின் பெருந்தன்மையைத் திரையுலகம் வியந்து பார்க்கிறது.

Related Posts