சந்தானத்தின் டிக்கிலோனா – வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள படம் டிக்கிலோனா.புதுஇயக்குநர் கார்த்திக்யோகி இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை புகழ் அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இவர்களோடு யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், அருண் அலெக்ஸாண்டர், இட்டிஸ் பிரசாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா.அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஆர்வி,படத்தொகுப்பு ஜோமின், நடன அமைப்பு சண்டைப்பயிற்சி சுப்பராயன்.கலை இயக்கம் ஏ.ராஜேஷ்
இத்திரைப்படம் டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.
2027 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்துவதற்காக டைம் டிராவல் செய்வதை போல் ‘டிக்கிலோனா’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் ஜீ 5 இணையத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.











