தனுஷ் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்ட முதல்பார்வை

கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூலை 28) மாலை ஆறு மணிக்கு அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது.
அப்படத்துக்கு பட்டாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.