வேலைக்காரன் படத்துக்கு ஐந்து விருதுகள்
24 ஏஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2017 டிசம்பர் 22 ஆம் நாள் வெளியான திரைப்படம் வேலைக்காரன்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, விஜய்வசந்த் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியிருந்தார்.
நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்று பரவலான பாராட்டைப் பெற்ற அந்தப் படத்துக்கு ஐந்து விருதுகள் கிடைத்திருக்கின்றன.
அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டெக்கோஃபெஸ் 2018 விருது வழங்கும் நிகழ்ச்சியில் வேலைக்காரன் படத்துக்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது.
1.சிறந்த படம் வேலைக்காரன்,
2.சிறந்த நடிகர் சிவகார்த்திகேயன்,
3.சிறந்த இயக்குநர் மோகன்ராஜா,
4.சிறந்த குணச்சித்திர நடிகை சினேகா,
5.சிறந்த கலை இயக்கம் முத்துராஜ்
ஆகிய ஐந்து விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகர் விருது பெற்ற சிவகார்த்திகேயன், இப்படத்துக்கான உழைப்பு மிக அதிகம். அதற்கான அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.











